About Astrologer

ஜோதிடர். Dr.நவசக்தி சுந்தர்ஜீ அவர்கள் பற்றி:

ஜோதிடர் Dr.நவசக்தி சுந்தர்ஜீ அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ராஜமன்னார்குடியில் பாரம்பரியமிக்க,வைஷ்ணவ பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவரது முன்னோர்கள் ஜோதிடத்தில் புகழ்பெற்றவர்களாக இருந்துள்ளனர். சிறு வயது முதலே ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்துள்ளார். மன்னார்குடியில் பள்ளிப்படிப்பை (National High School), முடித்தார், பிறகு மன்னை ராஜகோபால சுவாமி கலை கல்லூரியில் பட்டபடிப்பை தொடர்ந்தார். பட்டபடிப்பை முடிக்கும் முன், ஜோதிட அறிவை, பெருக்கிட   முன்னோர்கள் மூலமும், குருமார்கள் மூலமும், புத்தகங்கள் வாயிலாகவும் கற்று தேர்ந்து பலன் சொல்ல ஆரம்பித்தார். இயற்கையாகவே இவருக்கு ஜோதிடம் சொல்லும் திறன் (Intuition) இருந்ததால் மெய்சிலிர்க்கும் சிறப்பான பலன்கள் கூறிவந்தார்.

ஜோதிடத்தை முறையாக கல்வி கற்கும் நோக்கில் டிப்ளமோ,இளநிலை, முதுநிலை ஆகியவற்றை சாஸ்திரா பல்கலைகழகத்தில் முறையாக பயின்றார். பிறகு  தஞ்சை PRIST UNIVERSITY யில் Ph.D (ஜோதிட ஆராய்ச்சியாளர்) பயின்றார். ஜோதிட ஆராய்ச்சிக்காக சுமார் ஆறு வருடங்கள் ஓசூரில் தங்கி பல ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தியாவில் உள்ள பல அரசியல் மற்றும் அதிகாரத்துவம் பொருந்திய பிரபலங்களுக்கு ஜோதிட பலன்கள் கூறி புகழ் பெற்றவர். மேலும் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று பலன்கள் கூறி வருகிறார். பலன்கள் சொல்வது மட்டும் இல்லாமல் பிரச்சனைகள் இருந்தால், அதற்கு ஏற்ற வகையில் பரிகாரங்கள் – ஹோமங்கள் போன்றவற்றை சொல்லி அவர்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறார். ப்ரசன்ன ஜோதிடத்தில் இவர்ஆற்றிய சாதனைகள், மிகச் சரியான பலன்கள் ஏராளம். வாஸ்து  சாஸ்திரத்தில் கட்டிட அமைப்பில்மாற்றங்கள் செய்யாமல், காஸ்மிக் சக்தி, பூமி சக்தி,போன்றவைகளை, கண்டு அறிவதோடு, கெடு சக்திகளின்ஆக்கிரமிப்பு, 13 ம் எண்ணின், சித்து விளையாட்டுகள்,உள்ளதா, என்பதையும், அறிந்து நிவாரணம் தேடித்தரும்,பணிகளையும், மிகக் குறைந்த செலவில் செய்து தருகின்றார்.

இந்தியாவில் ஜோதிடத்தில் Ph.D டாக்டர் பட்டம் பெற்ற மிகச் சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. துல்லியமான கணித முறை மூலம் ஜோதிட சேவைகளை புரிந்து வருகிறார். ஜோதிடம் கற்க விரும்பவர்களுக்கு இவர் ஒரு சிறந்த வழிகாட்டி என்பதே உண்மை. தற்போது சென்னை மற்றும் ஓசூரில் ஜோதிட சேவைகளை புரிந்து வருகிறார். இந்த இணையதளத்தின் மூலமாக டாக்டர்.நவசக்தி சுந்தர்ஜீ அவர்களை தொடர்பு கொண்டு பயன்பெறவும். Mobile: +99941 81293 / +91 94431 04242.