பீஷ்மா /Beeshmaah
சனி பகவான்13.07.2025 முதல் வக்கிர கதியில் பலன் அளித்து வருகிறார். கிட்ட தட்ட நாலாறை மாதங்கள் வக்கிரத்தில் தான் பலன் அளிக்கிறார்.
மேஷம் : பெரிய அளவில் சொல்லும்படியான, பெரிய மாறுதல்கள் எதுவும் நடக்காது. பயம் தேவையில்லை.
ரிஷபம் : பெரிய அளவில் கோட்டை கட்டி, கனவுலகில் பயணிக்க வேண்டாம்.
மிதுனம் : வீண் அலைச்சல், வீண் விரையம், உழைப்பு வீணாகுதல் சகஜம். அலைச்சலை குறைக்க பார்க்கவு ம்.
கடகம் : திட்டமிட்டு வைத்த தெய்வ பிரார்த்தனைகள், நடக்காது. தூர தேச பிரயாணங்கள், தள்ளிப்போகும். பிதுர் ராஜ்ய சொத்துக்கள், பெறுவது தடங்கல் படும். முயற்சியை தள்ளிப்போடுங்கள்.
சிம்மம் : பெரிய மண்டகொடைச் சலோடு, இருந்த சிக்கல் தீர வாய்ப்பு உண்டு. முயற்சி பண்ணுங்க வெற்றி அடையலாம். வாழ்த்துக்கள்.
கன்னி : எலியும் பூனையுமா இருந்த தம்பதிகளுக்கு அடுத்த குழந்தை, வாய்ப்பு காத்து கிட்டு இருக்கு. ஜமாய்ங்க. எதிர்பாராமல் திருமணம் நிச்சயம் ஆகும். அல்லது நடக்கும்
துலாம் : திருமணம் நிச்சயம் ஆகும். கடன் தீரும். நீண்ட நாள்நோய், தீர வழி கிடைக்கும். காதலர்கள் ஒன்று சேர்வார்கள். உங்கள் மீது இருந்த பழி அகலும.
விருச்சிகம் : உடல் நிலை கொஞ்சம் மக்கர் பண்ணும். குழந்தைகள், பற்றிய கவலை நிச்சயம் குறையும். கருத்தரிப்பிற்கு, காத்திருக்கும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி உறுதி. Enjoy.
தனுசு : வீட்டு பிரச்னை விடுதலை அளிக்கும். சிலர் வீடு மாறுவார்கள். நெஞ்சுவலி வந்து நீங்கும். இதய ரத்தவோட்ட, சிகிச்சையில் பலன் கிடைக்கும். அடைப்பு இருந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.
மகரம் : திட்டமிட்ட சிறிய பிரயாண முயற்சிகள் தடைப்படும். E N T டாக்டரிடம் மொய் எழுத வேண்டி வரும். சந்தோசமா போயிட்டு வாருங்கள். இறைக்கிற கேணியில் தான் தண்ணீர் ஊரும்.
கும்பம் : வாக்கு தவறி போகும். கண்ணில், பல்லில் தொந்திரவு வந்து நீங்கும். தினசரி வருமானம் ஈட்டு பவர்களுக்கு, சக்கை போடு போட்டு வருமானம். ஜாலி தான்.
மீனம் : மன அழுத்தம் நீங்கும் தொழிலில் வருமானம் ஏறும். கூட்டாளிகள் மக்கர் பண்ணுவது குறையும். கீழே வேலை பார்ப்பவர்கள் அனுசரித்து போக நினைப்பார்கள். பிள்ளையாரிடம் சென்று சதுர்காய் உடைத்து பிரச்சனைக்கு விடை தேடுங்கள். விடை கிடைக்கும்.
Jaya jaya nirusimha portri
Let God be always with us.
அனு தினமும் ஜோதிடத்தை சுவாசித்து யோசிப்போம்.
அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஜோதிடம் மூலம் தீர்வு காண்போம். ஜாதகமே இல்லாதவர்களுக்கு பிரசன்னம் மூலம் நொடியில் வழி காட்டுவோம்.
Dr.Navasakthi Sundarjee
