Astrosundarjee

பீஷ்மா /Beeshmaah

பீஷ்மா /Beeshmaah  

இந்த வருடத்தில் யாருக்கெல்லாம், திருமணம் நடந்து முடியும் வாய்ப்புகள் அதிகம் என்பதை பதிவு செய்கிறோம்.குரு பகவான் மிதுனத்திற்கு வந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆயிடிச்சு. குரு பகவான் ஆட்சி கிடையாது உச்சம் கிடையாது. பகை வீடு வேற. இப்படி இருக்கும்போது எப்படி அவர் நல்லது செய்யமுடியும்? செய்வார் எப்படின்னா? கால புருஷ தத்துவத்தின் 3 வது ராசி. கட்டில் சுகத்தை கொடுக்கும் ராசி. சரி. அவர் பயணிக்கும் நக்ஷத்திரங்கள் மிருகசிரிஷம், செவ் வாய் மங்களகா ரகன், மாங்கல்ய பலத்தை கூட்டும். குரு மங்கள யோகத் தை, கூட்டும். அடுத்து ராகு நக்ஷத்திரத்தில் பயணிக்கும் குரு சண்டாள யோகாமல்லவா வரும். அது கெடு பலனை அல்லவா கொடுக்கும் ஜோசியரே. வாசகர் கிடிக்கி பிடி, போடுவது தெரிகிறது. எப்படிங்க நல்லது செய்வார்? செய்வார் நிச்சயமாக செய்வார். எப்படின் னா? எந்த நக்ஷத்திரத்தில் பயணிக்கிறாரோ, அந்த நக்ஷத்திர நாயகன், திரி கோணத்தில் இருக்கின்ற படியா லும், குருவின் திரி கோண பார்வை அவருக்கு கிடைத்து, அவர் சுபத்தன்மை பெறுகின்றார். இதனால குரு திருவாதி நக்ஷத் திரத்தில் அற்புதமாக பயணித்து, கால புருஷ தத்துவத்தின் உப ஜெய ஸ்தானத்தை மேலும் வலுப்பெற, செய்கின்ற காரணத்தால் இவ் வாண்டு மற்றும் 2026 குரு பெயர்ச்சி வரை கல்யாண மண்டபங்கள் நிரம்பும் வழியும். காற்று உள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழ மொழியை நிஜமாக்குங்கள். தெருக்கள் தோறும் சந்தன மணம் வீசட்டும். துலாம், தனுசு, கும்பம் ராசி மற்றும் லக்கின காரர்கள் பாடு கொண்டாட்டம் தான்!! 

Jaya jaya nirusimha portri  

Let God be always with us. 

அனு தினமும் ஜோதிடத்தை சுவாசித்து யோசிப்போம். 

அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஜோதிடம் மூலம் தீர்வு காண்போம். ஜாதகமே இல்லாதவர்களுக்கு பிரசன்னம் மூலம் நொடியில் வழி காட்டுவோம். 

Dr.Navasakthi Sundarjee